யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதி வணக்கத்துக்குரிய அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை 14வது லியோவினால் இந்த நியமனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் கொழும்பு பேராயர் மறைமாவட்டத்தின் பிரதி ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் திருத்தூதர் நிர்வாகியாகவும் பணியாற்றிய அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் ஆயராக வணக்கத்துக்குரிய பேணாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
