அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை- 110 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை இன்று மாலை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தப் பிரேரணை தொடர்பாக, வாக்கெடுப்பு நடத்தப்பட கோரியிருந்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, அவசரகால நிலை நீடிப்பு பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
