மேலும்

பெலாரஸ் நாட்டு போர்த்தளபாடங்களை வாங்கும் திட்டம் இல்லை- சிறிலங்கா இராணுவம்

Brig. Roshan Seniviratneபெலாரஸ் நாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டில் நடந்த MILEX 2017 என்ற இராணுவ தளபாடக் கண்காட்சியில், பங்கேற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுத தளபாடங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.

”நாங்கள் பிரதானமாக, எமது கவசவாகனங்களை திருத்தியமைத்து, ஆயுததளபாடங்களை நவீனமயப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளோம்.

அத்துடன் புதிய வகையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் வாங்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்,  பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுததளபாடங்களை வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *