மாகாண சபை தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழு
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தெரிவுக் குழு தேர்தலை நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை ஆராய்ந்து, தாமதமின்றி தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான வாசிப்பின் போது, தெரிவுக் குழுவை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைப்பார்.
இதன் பின்னர், மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்கள் குறித்த நடவடிக்கையை தெரிவுக் குழு ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
