தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் திட்டம் – தமக்குத் தெரியாது என்கிறது சிறிலங்கா
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம்- தலைமன்னார் பாலம் அமைப்பது தொடர்பாக விரைவில் உடன்பாடு செய்து கொள்ளப்படும் என்று, இந்திய மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம,
”சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி இரு நாடுகளுக்கு இடையில் பாலம் குறித்து கூறும் விடயங்கள் எமக்கு தெரியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.