வசந்த கரன்னகொட, யோசித ராஜபக்சவுக்கு குற்றப்பகிர்வுப்பத்திரம் கையளிப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, நேற்று பிரதிவாதிகளான இருவரும், கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு குற்றப் பகிர்வுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
