மேலும்

செம்மணியில் நேற்று ஒரே நாளில் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனித புதைகுழியில் இருந்து நேற்று 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35 ஆம் நாள் அகழ்வுப் பணி நேற்று நடைபெற்ற போதே, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 431  ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த மோதிரம் ஒன்றும்  குவியலாக இரண்டு தொகுதி எலும்புக் கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *