மேலும்

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 437 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில்  நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள்  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது,  ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில்  தாயாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஒரு எலும்புக்கூட்டின் அருகே சிறு பிள்ளையின் எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 437ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நேற்று 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை அகழ்ந்தெழுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 428 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *