மேலும்

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் (PACAF) தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider) மூன்று நாள் பயணமாக நேற்று சிறிலங்காவை இலங்கை வந்தடைந்துள்ளார்.

பலமடைந்து வரும் அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு கூட்டுறவை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார்.

இந்தப் பயணத்தின் போது, ​​ஜெனரல் ஷ்னைடர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிறிலங்கா விமானப்படையின் தலைவர்கள் உட்பட சிறில்ா அரசாங்கத்தின் மூத்த தலைவர்களையும், பாதுகாப்புத் தலைவர்களையும் சந்திப்பார்.

இதன்போது, வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு, இணைய பாதுகாப்பு, பேரிடர் பதிலளிப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்படும்.

ஜெனரல் ஷ்னைடரின் வருகை கூட்டுப் பயிற்சிகள், இராணுவப் பரிமாற்றங்கள் மற்றும் நிலையான மூத்த-நிலை உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவடைந்து வரும் இருதரப்பு உறவின் அண்மைய மைல்கல்லாகும்.

பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமையைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியில் சிறிலங்காவை அத்தியாவசிய பங்காளியாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *