மேலும்

Tag Archives: பிரகீத் எக்னெலிகொட

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்  மீது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்னெலிகொட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்ய நடவடிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் கடத்தல் சம்பவம்- சிறிலங்கா இராணுவத் தளபதியின் ஒத்துழைப்பை கோருகிறார் மனைவி

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறு அவரது மனைவி  சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த கொள்கையை வகுக்கவுள்ளதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையினர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

குற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய எல்லே குணவன்ச தேரர்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.

சந்தியா எக்னெலிகொடவுக்கு துணிச்சலான பெண் என்ற விருது வழங்குகிறது அமெரிக்கா

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ஆட்சியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை – 87 பேர் தாக்கப்பட்டனர்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் சிறிலங்காவில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.