மேலும்

மாதம்: December 2025

திருவனந்தபுரத்திற்கு திரும்பியது நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு

சிறிலங்காவில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.

அசோக ரன்வல மீது உடனடி நடவடிக்கை இல்லை- நிஹால் அபேசிங்க

காவல்துறை தனது விசாரணையை முடித்து, தீர்ப்பை அறிவிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான அசோக ரன்வல மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் எரிசக்தி கொள்வனவு குறித்து சிறிலங்கா பேச்சுவார்த்தை

நிலையான எண்ணெய் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மொஸ்கோவிற்கான சிறிலங்கா தூதுவர் ஷோபினி குணசேகர தெரிவித்துள்ளார்.

7 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளித்த இந்திய இராணுவ மருத்துவக் குழு புறப்பட்டது

டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

விரைவில் அனைத்துலக கொடையாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு

பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க, அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்

டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த  (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா

சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை

வரும் 18ஆம் திகதி  கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

கடும் தண்டனைகளுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின்  கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஸ்வரன் படுகொலை வழக்கு – மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.