விரைவில் அனைத்துலக கொடையாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு
பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க, அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேரிடரினால், ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான மதிப்பீடுகளை உலக வங்கி மேற்கொண்டு வருகிறது.
இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், அனைத்துலக நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அண்மைய பேரிடரினால் சுமார் 6 தொடக்கம் 7 பில்லியன் டொலர் வரை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
