மகேஸ்வரன் படுகொலை வழக்கு – மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, ஜோன்சன் கொலின் வலண்டினோ அல்லது வசந்தன் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, வசந்தன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் யசந்த கோதாகொட, அசல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மனுவை விலக்கிக் கொள்ள அனுமதி கோரினார்.
மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
