மேலும்

இன்றும் செம்மணிப் புதைகுழியில் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 40 ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது,புதிதாக 9 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதையடுத்து அடையாளப்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை இன்றைய அகழ்வின் போது,  7 மனித எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *