மேலும்

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்தில் நடந்த மோசமான ஊழல்கள் குறித்து, ஒரு நிகழ்வில் உரையாற்றிய, சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை.

சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமானா போன்றவர்கள்,   ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாடுகளை எடுத்தனர்.

ஒரு நண்பரால் அனுப்பப்பட்டதாகக் கூறி உகண்டாவிலிருந்து திருப்பதிக்கு பறக்க ஒரு தனியார் ஜெட் விமானத்தை அழைக்கலாம்,

சீனாவிற்கு 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணத்தின் போது 65 பேர் சிறிலங்கன் விமானசேவை விமானத்தில் அதிகாரப்பூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது நிலையைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ச போன்றவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

சரத் பொன்சேகாவின் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் என்பதால், ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள் மற்றும் கேணல்கள் உட்பட 35 மூத்த இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து ராஜபக்ச அரசாங்கம் வெளியேற்றியது என்றும்  அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *