ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கையொப்பங்கள் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பு
நீதியின் ஓலம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் கடந்த 5 நாட்களாகத் திரட்டப்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்கள், ஐ.நா. வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து நீதியின் ஓலம் கையெழுத்துப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பமாகிய இந்தப் போரட்டத்தின் பிரதான நிகழ்வு, இன்று முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து, தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் எனும், கையொப்பப் போராட்டம் நிறைவுக்கு வந்திருப்பதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
எழுமாறாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 1இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர் என்றும், இவை ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



