ரணில் வழக்கை பார்வையிட நீதிமன்றம் சென்றாரா பிரித்தானிய தூதுவர்?
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக் நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.பிரித்தானியத் தூதரகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளது.
இதுபோன்ற அறிக்கைகள் தவறானவை என்று தெளிவுபடுத்தியுள்ள பிரித்தானிய தூதரகம், பொதுமக்கள் தூதரக செயல்பாடுகள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு தூதரகம் அல்லது தூதுவரின் அதிகாரப்பூர்வ கணக்குகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஹரிணி அமரசூரிய நள்ளிரவில் சென்று பார்வையிட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
அதனை பிரதமர் செயலகம் நேற்று மறுத்திருந்ததுடன், அவ்வாறான சந்திப்பு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஹரிணி இன்று சவால் விடுத்துள்ளார்.
