ஜெனிவா பிரேரணை கடுமையானதாக இருக்காது- சிறிலங்கா நம்பிக்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்படும் புதிய பிரேரணை, கடுமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர்,
“வெளிவிவகார அமைச்சு முதலில் இந்த விடயத்தை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்.
பின்னர் தேவையான தலையீடுகளை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.
புதிய பிரேரணை கடுமையான ஒன்றாக இருக்காது என்பது எங்கள் கருத்து.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
