2025இல் 4.5 வீத பொருளாதார வளர்ச்சி- சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்ப்பு
2025ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4.5 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது, உலக வங்கி எதிர்பார்த்த 3.5 வீத வளர்ச்சியை விட அதிகமாகும்.
நேற்று சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயக் கொள்கை பற்றிய அறிக்கையிலேயே, இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து வலுவாக மீண்டுள்ள சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டில் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வலுவாக இருக்கும் என்றும், 2024 ஆம் ஆண்டில் காணப்பட்ட நேர்மறையான வேகத்தில் தொடரும் என்றும் சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
