மேலும்

ரணிலைப் புறக்கணித்த இந்தியா- எதிர்ப்பு வெளியிட்டது ஐதேக.

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறிலங்காவின் உள்ளூர் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட 3 பக்க சிறப்பு இணைப்பு தொடர்பாக, இந்தியத் தூதரகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நாளிதழ்களுக்கு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட சிறப்பு இணைப்பின், உள்ளடக்கம் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த பிரமுகர்களின் உயர்மட்டக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல முன்னாள் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக அந்த சிறப்பு இணைப்பில் இடம்பெற்றிருந்த ஒளிப்படங்களின் தேர்வு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் இராஜதந்திரிகள், ஒவ்வொரு பக்கத்திலும் சிறிலங்கா அதிபருடன்  இந்தியப் பிரதமரின் படங்கள் இடம்பெறுவது அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒளிப்படங்கள் அல்லது செய்திகள் முழுமையாக  அந்த இணைப்பில் தவிர்க்கப்பட்டிருப்பதையும், அவர்கள் கவனித்தனர்.

சிறப்பு இணைப்பில் உள்ள ஆசிரியர் தேர்வுகள் மற்றும் விடுபட்ட விடயங்கள் குறித்து, இந்திய தூதரகத்திடம்,  ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆழ்ந்த அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *