பீரிஸ் தலைமையில் இன்று மீண்டும் கூடும் எதிர்க்கட்சிகள்
சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதே இதன் நோக்கமாகும் என்று எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இதேபோன்ற கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கலந்துரையாடல் முந்தைய கூட்டத்தின் நீடிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அரசாங்கத்தை நேரடியாக சவால் செய்யும் நோக்கில் கூட்டணியை உருவாக்குவது இந்தக் கூட்டத்தின் நோக்கமல்ல என்று எதிர்க்கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
மாறாக, பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் குழுக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மையான நோக்கமாகும்.