செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி தடயவியல் அகழ்வாய்வுத் தளங்களில் இரண்டாம் கட்ட அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இந்த அகழ்வுப் பணியின் 23ஆவது நாளான இன்று மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை இனங்காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்று ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, இந்தப் புதைகுழிப் பகுதியை அண்டியதான நிலப்பரப்பில் நிலத்தை ஊடுருவி ஆய்வு செய்யும் ராடர்களை பயன்படுத்தி எலும்புக்கூடுகளை இனங்காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இதுவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.