அனுரவுடன் மாலைதீவு சென்ற நாமலுக்கு நீதிமன்றம் பிடியாணை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவைக் கைது செய்ய அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதை அடுத்தே, அவருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தனிப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக, நாமல் ராஜபக்ச, இன்று மாலைதீவுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்சவும் மாலைதீவுக்குச் சென்றுள்ளார்.