கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்
1983ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை படுகொலைகளின் 42வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொழும்பு பொரளை சந்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வடக்கு-தெற்கு ஒற்றுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
1983 கறுப்பு ஜூலை படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மற்றும் தெற்கு நட்புறவு இயக்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சிறிநாத் பெரேரா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உறுதியான முன்னேற்றம் இல்லாதது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து அனுரகுமார திசாநாயக்க அதிபரான பின்னர் இது முதல் கறுப்பு ஜூலை.
கறுப்பு ஜூலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் காணி உரிமைகள் போன்ற தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகளை கொண்டு வரும் என்று மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு சில வீதிகளைத் திறப்பதைத் தவிர, குறிப்பிடத்தக்க எதுவும் நடக்கவில்லை,” என்றும், சட்டத்தரணி சிறிநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.