சாதாரண மக்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விலைகள் உயர்வு
சிறிலங்காவில் சாதாரண மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த இந்த விலை மாற்றங்களை லங்கா ஐஓசி, சினோபெக் போன்ற நிறுவனங்களும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளன.
ஒரு லீற்றர் வெள்ளை டீசல் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 289 ரூபாவாகவும்,
ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 305 ரூபாவாகவும்,
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை, 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 185 ரூபாவாகவும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆடம்பர- சொகுசு வாகனங்களின் பயன்பாட்டுக்கான, ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் என்பனவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.