நல்லூரில் கூட்டாட்சி: விக்கி – சுமந்திரன் உடன்பாடு கைச்சாத்து
நல்லூர் பிரதேச சபையில், கூட்டாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இந்த உடன்பாட்டில் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.
சி.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், தமிழ் மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு ஆண்டுகள் இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஆட்சி செய்யும் வகையில், ஆட்சிப் பகிர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி ஏனைய சபைகளில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.