மேலும்

மாதம்: April 2025

மிகத் தெளிவான செய்தியை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்

சிங்கள மேலாதிக்க ஆக்கிரமிப்பாளர்களான ஜேவிபி உள்ளிட்ட எந்த சிங்கள கட்சிகளையும், தமிழர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற செய்தி மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் பசில்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்- தயாசிறி ஜயசேகர

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப்பிரதமருடன் அவசரமாக தொலைபேசியில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசவே இணக்கம்- வரிக்குறைப்பு தீர்மானம் இல்லை

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவதற்கு என்பிபி அரசாங்கம் பின்னடிப்பு

நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனிநபர் பிரேரணைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி ஆதரவு வழங்க பின்னடித்து வருகிறது.

சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் முடக்கம்.

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, ஆபாச இணையத்தள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுக்கள் வெற்றியா?- ரணில் சந்தேகம்.

பரஸ்பர வரிகள்  தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்திய கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம்  கூறியிருப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்பிஐயின் தீர்மானத்தை நிராகரிக்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் ஷானி அபேசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, மீளாய்வு செய்யும் குழுவில், மத்திய குற்ற விசாரணப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.