அமெரிக்காவுடனான பேச்சுக்கள் வெற்றியா?- ரணில் சந்தேகம்.
பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்திய கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?
சீனா மற்றும் பெரிய நாடுகளுடனான தனது கலந்துரையாடலையே அமெரிக்கா இன்னும் முடிக்கவில்லை.
ஆரம்பத்தில் பெரிய நாடுகளில் மாத்திரம் அமெரிக்கா கவனம் செலுத்தும்.
அதன் பின்னரே சிறிய நாடுகளில் கவனம் செலுத்துவார்கள்“ என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.