மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் பசில்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் விரைவில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பி, கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபடவுள்ளார் என்று, பொதுஜன பெரமுன வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதை அடுத்து, அமெரிக்கா சென்று பசில் ராஜபக்ச, அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து வருகிறார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறிலங்கா திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.