மேலும்

அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்களுக்குத் தடை

வரும் அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எச்சரித்துள்ளார்.

“ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக  அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக,  மற்றொரு கட்சி அல்லது வேட்பாளரால், யாரேனும் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவரது பெயர்  வாக்காளர்களின் முன்பாக அம்பலப்படுத்தப்படும்.

போலி வேட்பாளர்கள் என கண்டறியப்பட்டால், வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உடனடியாகவே ரத்து செய்யப்படும்” என்றும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

கடந்த அதிபர் தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகளால், போலி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இவர்கள்  மற்ற வேட்பாளர்களின் மீது சேறு பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.

அத்துடன், போலி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பரப்புரை நேரம், மற்றும் கூட்ட இடங்களையும், சம்பந்தப்பட்ட முக்கிய கட்சியினால் களமிறக்கப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *