மேலும்

மாதம்: May 2019

தேவாலயங்களுக்குள் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்களுக்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம் செய்யப்படவுள்ளனர்.

நாரஹேன்பிட்டி சுற்றிவளைப்பில் 23 பேர் கைது – தொடர்கிறது இராணுவ வேட்டை

கொழும்பு- நாரஹேன்பிட்டிய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் – பெண் ஒருவர் உள்ளிட்ட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை

அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா

சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக,  கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது

சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்

ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில்  மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும்  மதம்,  அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும்  நிலையை பெற்று கொண்டுள்ளது.  குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.