வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்
சிறிலங்காவின் வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கும் சூழல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவியுள்ள நிலையில், சிறிலங்கா முழுவதும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன் நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் குளியாப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.