மேலும்

புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

26 ஆண்டுகளாக நீடித்த புலிகளின் பிரிவினைவாத தீவிரவாதத்தை, ஒரு இலட்சம் இந்திய அமைதிப்படையினரால் கூட தோற்கடிக்க முடியாதிருந்த நிலையில், எமது வீரம்மிக்க படையினர் அவர்களைத் தோற்கடித்திருந்தனர்.

அதேபோன்று, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் சக்தி எமது புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    Congratulations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *