மேலும்

கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் இலங்கையர்கள் சிக்கவில்லை

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்டுமூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

எனினும், பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அங்குள்ள நிலைமைகளை வெலிங்டனிலும், கன்பராவிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கண்காணித்து வருவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *