உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்காக, இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தமது கருத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவில்லை.
இதனால் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.