மேலும்

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேணல் ஜெனரல் அலெக்சான்டர் போமின், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இருதரப்பு இராணுவ மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேலதிக முன்னேற்றங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு ரஷ்யா ஏற்கனவே விருப்பம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *