மேலும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு – இவர்களின் கருத்து

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

  • ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து, அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம்

-இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன்

  • உச்சநீதிமன்றம் குறுகிய நாட்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது சிறிலங்காவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு.

-சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரன்

  • அரசியலமைப்புக்கு எதிரான சர்வாதிகாரத்துக்கு கொடுக்கப்பட்ட பாரிய அடி இது.

-தி இந்து ஆசிரியர் என்.ராம்

  • எமது நாடு இன்னமும் நம்பிக்கையின் நிலமாக இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காட்டுகிறது. ஒரு சுதந்திரமான நீதித்துறை ஒரு நாட்டுக்கு எதைச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

-சட்டவாளர்  சாலிய பீரிஸ்

  • எமது அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கம் வெற்றி பெற்றுள்ளது. வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியவர்களுக்கு இப்போது என்ன நடக்கப் போகிறது?

– நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்

  • எமது கருத்துக்கு மாறான தீர்ப்பை அளித்திருந்தாலும்உச்சநீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். ஏனெனநாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல், உண்மையான நீதி மக்களுக்கு கிடைக்காது.

– நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

  • சிறிலங்கா அதிபர் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக மதித்துச் செயற்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம், நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பன ஜனநாயகத்தின் தூண்களாகும்.நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

– ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க 

  • ஜனநாயகம் உறுதியானது, அரசியலமைப்பு பலமானது, இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும். உச்சநீதிமன்றின் தீர்ப்புக்கு சிறிலங்கா அதிபர் மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு இனிமேலும் செயற்படாது, நாட்டை பற்றி அவர்  நினைக்க வேண்டும்.

-ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச

  • முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், இந்த தீர்ப்பினால் பிரச்சினையை தீர்க்க முடியாது. மகிந்த ராஜபக்சவை பிரதமராகச் செயற்படத் தடைவிதித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்தி நாளை மற்றொரு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும். பேச்சுக்கள் மூலமான தீர்வு காத்திருக்கிறது.

-அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர் அலன் கீனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *