அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவருக்கு அங்கீகாரம்
அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.
முன்னாள் இராஜதந்திரிகளான, கலாநிதி ஜயந்த தனபால, அகமட் யூசுப், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகநாதன் செல்வக்குமரன் ஆகிய மூவருமே, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா பிரதமரின் சார்பில் அமைச்சர் தலதா அத்துகோரளவும், எதிர்க்கட்சித் தலைவரின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவும், அரசியல் கட்சிகளின் சார்பில் பிமல் ரத்நாயக்கவின் பெயரும், அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படுவதற்காக முன்மொழியப்பட்டுள்ளன.