மேலும்

விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால், சிறிலங்கா அரசியலில் இன்று கொந்தளிப்பான நிலை தோன்றியிருக்கிறது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கூட்டு எதிரணி  உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.

ஆளும்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து  சட்டத்துக்கு முரணானதாக இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து, ஐதேகவின் கருத்தோ, நிலைப்பாடோ அல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சரும், ஐதேக பொதுச்செயலருமான அகில விராஜ் காரியவசம்.

அத்துடன், அவரது கருத்தைக் கண்டிப்பதாகவும், ஐதேக தெரிவித்துள்ளது.

ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை கண்டித்துள்ளனர்.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரனைக் கைது செய்யக் கோரி, சிறிலங்கனா காவல்துறை தலைமையகத்தில் சிஹல ராவய அமைப்பு இன்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

ஒரு கருத்து “விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு”

  1. ‌மன‌ோ says:

    தன்ன‌ை ஒரு தமிழச்சியாக துணிச்சலுடன் அட‌ையாளப்படுத்தி உள்ளார். ‌வ‌‌ேட்டி கட்டிய ‌ப‌‌ொட்ட‌ைச்சிகளுக்கு மத்தியில் இவர் காணப்படுவது பாராட்டுதலுக்கு உரியது.

Leave a Reply to ‌மன‌ோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *