மேலும்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கும் கப்பல் – 11 மாலுமிகளும் மீட்பு

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து, 11.6 கடல் மைல் தொலைவில், Mutha Pioneer என்ற சரக்குக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் இருந்து இன்று அதிகாலை விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கையை அடுத்து, சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகள், விரைந்து சென்று, கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்டனர்.

டொமினிக்கன் குடியரசு கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில், இருந்து கப்டன் மற்றும் 10 மாலுமிகள் மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட கப்பலின் கப்டன் உள்ளிட்ட 10 மாலுமிகள் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள். ஒரு மாலுமி இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்.

மூழ்கியுள்ள கப்பல், இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *