சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் துப்பாக்கியுடன் மாயம்
சீனக்குடா விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
‘நேற்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இவர் அதற்குப் பின்னர் காணாமல் போயுள்ளார்.
இதுபற்றி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா விமானப்படையும், சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் தனது துப்பாக்கி, 3 ரவைக்கூடுகள், 30 ரவைகளுடனேயே தப்பிச் சென்றுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர் மட்டகளப்பு, பெரியமடுவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
விமானப்படையின் முறைப்பாட்டை அடுத்து காடுகளில் தேடுதல் நடத்திய சிறிலங்கா காவல்துறையினர் கப்பல்துறையில், குறித்த சிப்பாயின் குடிநீர் கொள்கலன் தாங்கியை கண்டுபிடித்துள்ளனர்.