மேலும்

மாதம்: March 2018

இந்தியாவிடம் அடிபணிந்து விட்டேனா? – முதலமைச்சர் விக்கி பதில்

நாங்கள் இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது என்று கூறியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு?

சட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது  அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தின் பேச்சாளர் அடுத்தவாரம் அறிவிப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் நாள் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசை நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதன் ஏனைய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.

பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்

காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும்,  தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்

மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்

சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்

காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன.