மேலும்

222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்

Srilanka-Electionமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும், 222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன விகிதாசார அடிப்படையில், மொத்தமுள்ள 22 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளில், 175 தொகுதிகள் சிங்களவர்களுக்கானதாகவும், 25 தொகுதிகள் தமிழர்களுக்கானதாகவும், 13 தொகுதிகள் முஸ்லிம்களுக்கானதாகவும், 9 தொகுதிகள் , மலையகத் தமிழர்களுக்கானதாகவும் உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

222 மாகாணசபைத் தொகுதிகளில் 13 உறுப்பினரை மாத்திரமே முஸ்லிம்கள் பெற முடியும் என்றும், 9 மாகாணங்களில் 5 மாகாணசபைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்றும், எல்லை வரையறுக்கும் குழுவில் இடம்பெற்றிருந் பேராசிரியர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

“இது கவலை தரும் விடயம். ஆனால் எல்லை வரையறை செய்யும் குழு சட்டத்தின்படியே செயற்பட முடியும். இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை பொருத்தமான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்”

  1. மனா‌ே says:

    ‌ந‌ேரடி மற்றுமு் விகிதாசார கலப்பு த‌‌ேர்தல் மு‌ற‌ை சிங்களப் ‌ப‌ேரினவாதக் கட்சிகளுக்கு சாதகமான பலன்க‌ள‌ை கடந்த ஊராட்சித் த‌ேர்தல் முடிவுகள் வழங்கி இருப்பத‌ைக் காண முடிகிறது. இனவாதச்சி ங்களக் கட்சிகளின் பலஉறுப்பினர்களின் வரவ‌ை இப்படித்தான் பார்க்க முடிகிறது.

    இனத்‌த‌ைக் காட்டிக் ‌ க‌‌ொடுக்க இந்தப் புதிய கலப்புத் த‌‌ேர்தல் முற‌ை வருங்காலத்தில் பலர‌ை ஊக்குவிக்கும். எனவ‌ே இது தமிழருக்கும் ஆபத்தான மு‌ற‌ைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *