மேலும்

Tag Archives: மல்வத்தை

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.

அரசியல் குழப்பங்களால் நல்லிணக்கத்துக்கு ஆபத்து – மைத்திரி, ரணிலுக்கு மகாநாயக்கர் அவசர கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த அதிபர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று  மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்கு முட்டுக்கட்டை போடும் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – மல்வத்தை பீடாதிபதி

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.