மேலும்

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம்

local-election results (3)சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகளை வட்டார ரீதியாக எண்ணி முடிவுகளை அறிவிப்பது என்றும், அதன் பின்னர், விகிதாசார முறையிலான ஒதுக்கீடுகளை அறிவிப்பதென்னும் தேர்தல் ஆணைக்குழு தீ்ர்மானித்திருந்தது.

இதற்கமை, நேற்று மாலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் முதல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால் இன்று அதிகாலை 12.50 மணியளவிலேயே முதலாவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவு அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, அம்பலங்கொட, கிரிந்த புகுல்வெல்ல பிரதேச சபைகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன், தேர்தல் முடிவுகளை வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

விகிதாசார ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும், மறு வாக்கு எண்ணிக்கை போன்றவற்றினால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, அரசாங்க  அதிகாரபூர்வ இணையத்தளம் மற்றும் துர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளங்களில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான முடிவுகளே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், அதிகாரபூர்வ முடிவு என்று சில ஊடகங்கள் முடிவுகளை அறிவித்து வருகின்றன.அவ்வாறு அறிவிக்கப்படும் முடிவுகளில் குழப்பங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக, ஏற்கனவு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைககளின் உறுப்பினர் எண்ணிக்கையை விட மிக அதிகளவான உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *