அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்த திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு தாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.
கட்சிக்குள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் தான், தமிழ் அரசு கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விலகிக் கொள்ளுமாறு, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.
இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினர்களாக முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து, தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.