மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்றது – 293 மில்லியன் டொலர் கையளிப்பு

hambantota-paymentஅம்பாந்தோட்டை துறைமுகம் இன்று சீன நிறுவனத்திடம் முறைப்படி கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை முறைமுகத்தை செயற்படுத்துவதற்காக, அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் நிறுவனங்களுடன்  சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.

இந்த நிறுவனங்களை உருவாக்கியுள்ள சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 85 வீத உரிமையையும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபை 15 வீத உரிமையையும் கொண்டிருக்கும்.

இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை பொறுப்பேற்ற சீன நிறுவனம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்க வேண்டிய முதற்கட்டக் கொடுப்பனவான, 293 மில்லியன் டொலரை கையளித்துள்ளது.

hambantota-payment

ஒரு கருத்து “அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்றது – 293 மில்லியன் டொலர் கையளிப்பு”

  1. siva says:

    very well done . well come china . next super power in the world . china is a only country can help srilanka financially . then srilanka will be a next hong kong .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *