மேலும்

யாழ். அல்லது திருமலையில் ஆந்திர அரசின் சிறப்பு பொருளாதார வலயம்- விரைவில் உடன்பாடு

India-srilanka-Flagஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் சிறிலங்காவில் கைத்தொழில் நடைக்கூடம் ( industrial corridor ) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆந்திர மாநில கைத்தொழில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அடுத்த சில வாரங்களில்  சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடல்வழிப் போக்குவரத்து வசசதிகளைக் கொண்ட சிறிலங்கா, கடலுணவு, மருந்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஆந்திர மாநிலத்துக்கு சிறந்த இடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.

இதற்காக ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு யாழ்ப்பாணம் அல்லது திருகோணமலையில் சிறிலங்கா அரசாங்கம் நிலங்களை ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, பரஸ்பர வர்த்தக உடன்பாட்டின் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில், ஆடை மற்றும் விமானப்பயணத் துறைகளில் சிறிலங்கா அரசாங்கம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

“சிறிலங்காவில் ஆந்திரப் பிரதேசத்தின் சிறப்பு பொருளாதார வலயத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும்.

மருந்து மற்றும் சற்றுலாத் துறைகளில் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்று அந்திர மாநில கைத்தொழில்துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *