மேலும்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது 100 மடங்கு ஆபத்தானது – விமல் வீரவன்ச

vimal-weerawansaமத்தல விமான நிலையத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுத்ததை விட 100 மடங்கு அதிகம் ஆபத்தானது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

‘மத்தல உடன்பாடு சிறிலங்காவுக்கு மிகவும் பாதமான நிலையை ஏற்படுத்தும். எந்தவொரு சூழ்நிலையிலும், அம்பாந்தோட்டை உடன்பாட்டை மத்தலவுடன் ஒப்பீடு செய்ய முடியாது.

மத்தல விமான நிலையத்தினால் பிராந்திய சக்தியான இந்தியாவுக்கு எந்த வர்த்தகப் பெறுமதியும் கிடைக்காது. எனவே இதனை இந்தியா எப்படிப் பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

நாட்டின் தேசிய சொத்துக்களை நீண்டகால குத்தகைக்கு வெளிநாடுகளுக்கு கொடுக்கும் போது, சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்த களநிலவரங்களை தற்போதைய அரசாங்கம் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இதுபற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.

அவர்களுக்குத் தனியே, மேற்குலகத்தையும், இந்தியாவையும் திருப்திப்படுத்துவது தான் ஒரே தேவையாக இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *