மேலும்

மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தலில் இரண்டாமிடத்தில் ராகவன் – லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி

Ragavan

கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி  இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

இறுதிக்கட்ட வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், லிபரல் கட்சி வேட்பாளர் 9856 வாக்குகளையும்,  ராகவன் பரஞ்சோதி 7501 வாக்குகளையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்திய செய்தி

னடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில்  அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லிபரல் கட்சி வேட்பாளர் மேரி, 1900 மேலதிக வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். அவரையடுத்து, கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

முந்திய செய்தி

கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லிபரல் கட்சி வேட்பாளர் 3200 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அவரையடுத்து, கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி 2200 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தல் வாக்களிப்பு முடிவு – வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பம்

கனடாவில் ஈழத் தமிழர்களால் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

மார்க்கம் தோன்ஹில் உள்ளிட்ட, கனடிய நாடாளுமன்றத்தின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3ஆம் நாள் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த தேர்தலில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் ஈழத் தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருப்பதாலும், அங்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி என்ற ஈழத் தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதாலும், ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுடுத்தியுள்ளது.

இந்த தேர்தல் கனடிய நேரப்படி திங்கட்கிழமை இரவு 9 மணியுடன் (தாயக நேரம் செவ்வாய் காலை 6.30 மணி) முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, சற்று முன்னர் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. வாக்குகள் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் தொடர்ந்து எதிர்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *